தமிழகத்தில் அமலுக்கு வரும் 2 முக்கிய மாற்றங்கள் - என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதனால், மதுபானங்களின் விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆகவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டும், 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டும் உள்ளது.

இதேபோல், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி, 750 மி.லி கொள்ளளவுகளில் விறக்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகம் மற்றும் கொள்ளளவுக்கு ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தற்போது 10,359 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதினை 60 ஆக்குவது மற்றும் அவர்களுக்கு விரும்பிய மாவட்டத்திற்கு மாறுதல் அளிப்பது என்பதை அரசு ஏற்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் இவ்வாசிரியர்களுக்கு மாத ஊதியத்தினை 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two major changes in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->