ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்திய 02 லாரிகள் பறிமுதல்..!
Two Lorries Smuggling Sand from Andhra to Tamil Nadu Seized
திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவின்படி, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் முனைவர் லட்சுமி பிரியா தலைமையில், உதவி இயக்குனர் வி.சிவப்ரியா, உதவி புவியலாளர் வி.நித்யா, சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் ஏ.சரத், எஸ்.ராஜேஷ் ஆகியோர் கனிமங்கள் கடத்தப்படுகிறதா என்று ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த 02 டாரஸ் லாரிகளை மடக்கி சோதனையில் ஈடுப்பட்டனர். இதில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக மணல் கடத்தி வருவது கண்டுப் பிடிக்கப்பட்டது. இதையடுத்து 02 டாராஸ் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, லாரியை ஒட்டி வந்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
English Summary
Two Lorries Smuggling Sand from Andhra to Tamil Nadu Seized