புளியந்தோப்பு பகுதியில் குடிபோதையில் தகராறு, ஒருவருக்கு கத்தியால் வெட்டு; சரித்திர பதிவேடு ரவுடிகள் 07 அதிரடி கைது..!
7 History Sheet Rowdies Swiftly Arrested in the Pulianthope Police Circle
சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியை சேர்ந்தவர் 54 வயதுடைய சண்முகம் நேற்றுமுன்தினம் இரவு கே.பி.பார்க் வெளியே நின்றுள்ளார். அப்போது குடிபோதையில் வந்த 04 பேர் சண்முகத்திடம் தகராறு செய்ததோடு, அவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த சண்முகம் தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட கே.பி.பார்க் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்கின்ற தவக்களை சந்தோஷ் (27), சூர்யா என்கின்ற பெண்டு சூர்யா (20), பிரகாஷ் என்கின்ற ஸ்டீபன் பிரகாஷ் (26), ஜவ்வு அப்பு என்கின்ற பிரேம்குமார் (21) ஆகிய சரித்திர பதிவேடு ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன், வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்கின்ற காட்டன் ராஜா என்ற சரித்திர பதிவேடு ரவுடியை நேற்று எம்கேபி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், நகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த விக்ரம் (42) என்ற சரித்திர பதிவேடு ரவுடியையும் வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அயனாவரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளவரசன் என்ற சரித்திர பதிவேடு ரவுடியை ஓட்டேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
7 History Sheet Rowdies Swiftly Arrested in the Pulianthope Police Circle