ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல்.! 

ஆந்திரா மாநிலத்திலிருந்து சேலம் வழியாக காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைத் தடுப்பு பிரிவு மத்திய புலனாய்வு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் சேலம் வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த கார் நிற்காமல் அதிவேகமாகச் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். 

இதையடுத்து, அந்த கார் கிராம சாலையில் சென்று கொண்டிருந்த போது, பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து போலீசார் காரின் அருகே செல்வதற்குள் காரில் இருந்த மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். அதன் பின்னர் போலீஸார், காரை கைப்பற்றி, அதில் இருந்த 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கார் இரும்பாலை மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், போலீசார் தப்பி ஓடிய மூன்று பேரையும் வலைவீசித் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two hundrad kg drugs seized in salem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->