'திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'; தவெக மகளிரணி புகார்..! - Seithipunal
Seithipunal


தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்த திமுக தலைவர் .ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் தவெக மகளிரணியினர் புகார் கொடுத்துள்ளனர்.

மதுரை தெற்கு தொகுதி தவெக மகளிரணி சார்பில் ரம்யா இன்று தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது;

''தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி, நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக பெண் வேட்பாளர் சத்தியபாமாவை உருவக் கேலி செய்து பேசிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

பெண் உடல் தோற்றத்தை பொதுமேடையில் கேலி செய்து அவமதிப்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட கண்ணியம், மரியாதையை பாதிக்கிறது.

முன்னாள் முதல்வர் என்ற முறையில் பொது வாழ்வில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட ஒருவர், பொதுமேடையில் தெரிவிக்கும் கருத்து பொதுமக்கள், ஊடகங்களில் பரவலாக கவனத்தை பெறுகிறது. புகார் மீது உரிய சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Womens Wing lodges complaint seeking action against DMK leader Stalin


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->