நாடு முழுவதும் நயாரா பங்க்-குகளில் பெட்ரோல் விலை ரூ.5, டீசல் ரூ.3 ஆக அதிகரிப்பு..!
Petrol price increased by rs5 and diesel by rs3 at Nayara fuel stations across the country
நாடு முழுவதும் உள்ள தனியாருக்கு சொந்தமான நயாராவின் 7,000-க்கும் மேற்பட்ட பங்க்-குகளில் சனிக்கிழமை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில், இதே காரணத்துக்காக நாயாரா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது. அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதம் அந்த விலை உயர்வு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,04,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்-குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Petrol price increased by rs5 and diesel by rs3 at Nayara fuel stations across the country