சீதாராம் யெச்சூரி மறைவு வருத்தமளிக்கிறது - த.வெ.க தலைவர்.! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதையடுத்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

இதற்கிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:- "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk leader vijay condoles seetharaman yechuri death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->