தவெகவின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நிர்மல்குமாருக்கு 24-ஆம் தேதி வரை சிறைத் தண்டனை..!
TVK Dindigul district secretary Nirmal Kumar sentenced to prison until the 24th
கடந்த மாதம் 27-ஆம் தேதி சனிக்கிழமையன்று தவெக தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். 100 கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் போலீசார் கைது சிறையில் அடைத்துள்ளனர். அடுத்ததாக, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பில், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குடித்த வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையான கண்டனங்களை முன் வைத்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு அவதூறுகள் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக தவெக கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நிர்மல்குமாரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட எஸ்.எம்.நிர்மல்குமார் நேற்று திண்டுக்கல் ஜே3 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து எஸ்.எம்.நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தவெகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
English Summary
TVK Dindigul district secretary Nirmal Kumar sentenced to prison until the 24th