பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி - எப்போது தெரியுமா?
pm modi election campaign in bihar
அடுத்த மாதம் நவம்பர் 2 ஆம் தேதி 243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என்று அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 15-ந்தேதி முதல் பீகாரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முதலில் பா.ஜ.க. தொண்டர்களுடனான அவரது கலந்துரையாடலுடன் இந்த பிரசாரம் தொடங்குகிறது.
அதாவது, 'எனது வாக்குச்சாவடி வலிமையானது' என்ற திட்டத்தின் கீழ் இந்த கலந்துரையாடல் நடக்கிறது. இதில் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு பீகார் பா.ஜ.க. தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
pm modi election campaign in bihar