பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் - காட்டில் தனியாக போராடிய பரிதாபம்!
Woman gangraped Woman who fought alone in the jungle
கூலி வேலைக்கு சென்ற பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த பெண் காட்டில் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் மெதக் மாவட்டம் கொள்சாரம் மண்டலத்தில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் ஒரு பெண் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதை பார்த்த கிராம மக்கள்
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு பெண் நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி மெதக் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காட்டில் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்தது பழங்குடியின பெண் என்றும், அவர் கடந்த வெள்ளிக்கிழமை கூலி வேலைக்காக அந்த கிராமத்துக்கு வந்தபோது
அவரிடம் யாரோ சிலர் பேச்சு கொடுத்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு பெண்ணை அவரது சேலையால் மரத்தில் கட்டி வைத்ததுடன், அவரை நிர்வாணப்படுத்தி பாலியல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் விடிய விடிய இரவு முழுவதும் நிர்வாணமாகவும், காயங்களின் வலியுடனும், உணவின்றியும் உயிருக்காக போராடி உள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பழங்குடியின பெண்ணை, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
English Summary
Woman gangraped Woman who fought alone in the jungle