பொதுமக்களே பாதுகாப்பா இருங்க.. டிவி வெடித்து திடீர் தீ விபத்து.!
TV blast accident in thiruvallur
உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.
அந்த வகையில் சமீபகாலமாக செல்போன், சார்ஜர், AC மற்றும் டி.வி போன்ற மின்சாதன பொருட்கள் வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரில் ரசித்து வருபவர் லாரி ஓட்டுனர் தினேஷ். இவரது மனைவி ஷாமினி. இதில் கணவர் தினேஷ் காலை வேலைக்கு சென்றதும் மனைவி ஷாமினி டிவி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது டிவிக்கு பின்னால் இருந்து புகை வர தொடங்கியது. இதனையடுத்து என்ன ஆனது என்று எழுந்து பார்ப்பதற்குள் வேகமாக தீப்பிடித்து டிவி பற்றி எறிய தொடங்கியது. இதனால் ஷாமினி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருகில் இருந்த சிலிண்டரை வேகமாக அப்புறப்படுத்தினர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த டிவியை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் வேகமான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
English Summary
TV blast accident in thiruvallur