மஹாவிஷ்ணுவை கைது செய்யும் அளவிற்கு பேசவில்லை - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி மாணவர்கள் மத்தியில் பேரினார்.

அதாவது, மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். மேலும், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி மஹாவிஷ்ணு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "மகாவிஷ்ணு பேசிய வீடியோவை நானும் பார்த்தேன்; கைது செய்யும் அளவிற்கு அவர் எதுவும் பேசவில்லை. இந்த விஷயத்தில் எதற்காக அன்பில் மகேஸ்க்கு இவ்வளவு சீற்றம் என்பது தெரியவில்லை. காலப்போக்கில் தெரியவரும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran speech abput mahavishnu arrest issue in putukottai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->