பாஜகவை கழட்டி விட யோசிக்கமாட்டார்.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமரிசித்த டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


விஜய் தலைமையிலான கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார்  என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  டிடிவி தினகரன் அவர்,கூறியதாவது: “தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்து விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்குச் செல்ல பழனிசாமி தயாராகிவிட்டார் என்று. . விஜய் தலைமையை ஏற்கும் வகையில் அதிமுக பலவீனமாகிவிட்டதா?

விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜகவை கழட்டி விட யோசிக்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி. இதனைத்தொடர்ந்து கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக அரசின் மேல்முறையீடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாடு காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் சிபிஐ விசாரணை தேவை இல்லை என அரசு மேல்முறையீடு செய்திருக்கும். உரிமைகளை விட்டுத்தரக் கூடாது என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோரிய வழக்குகளில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இப்படி கூறுவதால் திமுகவை நான் ஆதரிப்பதாக சொல்ல வேண்டாம்” என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran harshly criticized Edappadi Palaniswami, saying he would never think of ousting the BJP


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->