#வீடியோ: கண்ணீர் விட்டு அழுத டிடிவி.. நெஞ்சம் தாளாத சோகத்தில் கலங்கிய கண்கள்..! - Seithipunal
Seithipunal


தஞ்சை செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி வடக்கு மாவட்டம் மொட்டனுத்து ஊராட்சி மன்றத் தலைவர் பி.கே.ராஜன் இயற்கையை எய்தினார். இவரது மறைவு அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பி.கே. ராஜனின் இல்லத்திற்கு நேரடியாக சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்விட்டில், " தஞ்சை செங்கிப்பட்டி அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்த தேனி வடக்கு மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மொட்டனுத்து ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பி.கே.ராஜன் (எ) கருப்பு அவர்களின் உடலுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன்.

கழக நிகழ்ச்சிகளுக்காகவும், சொந்த பணிகளுக்காகவும் சாலை மார்கமாக பயணிக்கும் கழக உடன்பிறப்புகள் மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் பயணிக்கவேண்டுமென பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன்.

சாலை விபத்துகளில் நம்முடைய கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பதும், காயமடைவதும் எனக்கு மிகுந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது. ஆகவே, கழக உடன்பிறப்புகள் எச்சரிக்கையோடு பயணங்களை மேற்கொள்ளவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran cry party member death 16 November 2020


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal