தேர்தல் அதிர்ச்சியில் டிரம்ப் பின்வாங்கல்! உலகப் பொருட்களுக்கு விதித்த கடும் வரிகள் நீக்கம்!
Trump backtracks election shock Hefty tariffs global goods lifted
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், “பரஸ்பர வரி” என்ற புதிய பெயரில் உலக நாடுகளுக்குச் சுமத்தி வந்த அதிக வரிகள் அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் செலவையே தலைக்கனம் படுத்திவிட்டன.
குறிப்பாக அமெரிக்கர்களின் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத மாட்டிறைச்சி, காபி, பல்வேறு பழங்கள் போன்ற பொருட்களின் விலை வானளாவி, பொதுமக்களிடையே கடும் கோபத்தை கிளப்பியது.

இந்த அதிருப்தியின் தாக்கம் சமீபத்தில் நடைபெற்ற நியூயார்க் மேயர் தேர்தல், நியூ ஜெர்சி மற்றும் விர்ஜினியா மாநில கவர்னர் தேர்தல்களில் தெளிவாக வெளிப்பட்டது. அங்கு டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
மக்கள் மனநிலையை உணர்ந்த டிரம்ப், அதிரடியாக தனது நிலைப்பாட்டை மாற்றி, பல்வேறு வேளாண் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இதன் கீழ் மாட்டிறைச்சி, அன்னாசிப்பழம், காபி, வாழைப்பழம், தேநீர், பழச்சாறுகள், கோகோ, சில முக்கிய உரங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் வரிவிலக்கு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
டிரம்பின் இந்த திடீர் தீர்மானத்தை அமெரிக்க உணவு தொழில்துறை சங்கங்களும் மனமுவந்து வரவேற்றுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மென்மேலும் குறைந்து மக்களின் சுமை தளரும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
Trump backtracks election shock Hefty tariffs global goods lifted