திருச்சி வங்கியில் 510 சவரன் நகைகள் மற்றும் ரூ.40 இலட்சம் ரொக்கம் கொள்ளை.! கதறும் வாடிக்கையாளர்கள்., தேடுதல் வேட்டையில் காவல் துறையினர்.!!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் பஞ்சாப் நேசினல் வங்கியானது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சனிக்கிழமை குடியரசு தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டு இன்று காலை வங்கிக்கு வங்கி ஊழியர்கள் வந்தனர்.

அந்த நேரத்தில் வங்கியில் உள்ள லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும்., மோப்ப நாய்களை அழைத்து வந்து அதன் உதவியுடன் வேறு ஏதும் தகவலை கிடைக்கிறதா? என்ற சோதனையில் ஈடுபட்டனர். 

இது குறித்து வங்கி அலுவலர்களிடம் கேட்ட போது சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் துறையினர் வங்கியின் பின்புறத்தில் உள்ள பள்ளியின் சுவரை ஓட்டை போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது. 

வங்கியின் பின்புறமாக உள்ளே வந்த கொள்ளையர்கள் சுவரை ஓட்டை போட்டு வங்கிக்குள் நுழைந்து., கேஸ் வெல்டிங் மூலமாக வங்கியின் லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். மேலும்., வங்கியில் அவர்கள் நுழைந்தவுடன் அலாரம் எதுவும் ஒலிக்காததால்., மின் இணைப்பை அவர்கள் துண்டித்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. 

இது குறித்து தகவலறிந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு., நகையை பறிகொடுத்த மக்கள் கண்ணீருடன் "வீட்டில் இருந்தால் திருட்டு பயத்தின் காரணமாக வங்கியில் நகைகளை வைத்திருந்தோம்., தற்போது வங்கியில் திருட்டு போய் விட்டது., இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை" என்று வேதனையை தெரிவித்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில்., நேற்று 5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில்., சுமார் 510 சவரன் நகைகள் மற்றும் ரூ.21 இலட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களிடம் இருந்து தவறிவிழுந்த சுமார் 40 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 இலட்சம் ரொக்கத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர். 

கொள்ளையர்களை பிடிப்பதற்காக சுமார் 5 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்., மேலும்., வங்கியில் இருக்கும் காணொளி காட்சி மூலமாக வங்கியின் கொள்ளையர்களின் முகங்களை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRICHY PUNJAB NATIONAL Bank ROBBERY 510 JEWELS AND 40 LAKSH MONEY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->