ஊருக்கு போக பஸ் கிடைக்காத விரக்தி.! தம்பதிகள் செய்த காரியத்தால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


திருச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்ற 40 வயது வாலிபர் ஈரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். தனது, தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 

எனவே பதறிப்போன ராஜா தனது குழந்தைகள், மனைவியுடன் தாயை பார்க்க வெள்ளகோவில் வழியே திருச்சிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். நேற்று காலை, வெள்ளகோவில் வழியே அவர் திருச்சி பஸ்சுக்காக காத்திருந்த பொழுது பல மணி நேரங்கள் ஆகியும் அவர்களுக்கு பேருந்து கிடைக்கவில்லை. 

அவ்வழியே வந்த அனைத்து பேருந்துகளும் நிறுத்தாமல் சென்றதால், மிகவும் மன உளைச்சலுக்கு அந்த குடும்பத்தினர் ஆளாகியுள்ளனர். பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் திடீரென்று மனைவி குழந்தைகளுடன் சாலையின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் விஷயம் கேள்விப்பட்டு அவர்களை சமாதானப்படுத்தி, அவ்வழியே வந்த திருச்சி பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இதனால், சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy men dharna in vellkoil


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal