வெளிநாட்டில் உயிரிழந்த திருச்சி நபர் - கதறும் குடும்பத்தினர்.!
trichy man died in saudi
திருச்சி மாவட்டத்தில் உள்ள, வாழவந்தான் கோட்டை அருகே முல்லை வாசல் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவுதி அரேபியாவில் தோட்ட வேலைக்காக சென்றிருந்தார்.
ஒப்பந்த முறையில் வேலைக்கு சென்ற அவர் கடந்த நவம்பர் 18-ம் தேதி பணி முடிந்து அறைக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது ராஜசேகர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சவுதி அரேபியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, அங்கு பணியாற்றும் நபர் ராஜசேகரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிய வந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகரின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ராஜசேகரின் மறைவிற்கான காரணம் தெரியாத நிலையில், அவரது உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடு சென்றவர், விபத்தில் உயிரிழந்த சம்பவம் துவாக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.