போக்குவரத்து துறை தொழிற்சங்க போராட்டம்: மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய குழுவை அமைக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வு பெற்றவர்களுக்கான 96 மாத ஓய்வூதிய ஊதியம் வழங்க வேண்டும், அகவிலை படியை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

தொடர்ச்சியாக தொழிலாளர்கள் நலத்துறை மற்றும் போக்குவரத்து துறை சங்கங்கள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தொடர்ந்து நான்கு கட்டங்களாக நடைபெறும் உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால் 15 வது ஊதிய குழு உள்பட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள், போக்குவரத்து துறையுடன் நாளை மதியம் 3 மணியளவில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. 

இந்த பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transport union strike Tripartite talks tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->