ரயில் பயணிகள் கவனத்திற்கு! டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றங்கள்! இன்று முதல் அமல்! - Seithipunal
Seithipunal


பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்திய ரயில்வே இன்று முதல் பல புதிய டிக்கெட் முன்பதிவு விதிகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

முதன்மையான மாற்றமாக, ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்கள், இனி பத்திரமான பெட்டிகளில் (படுக்கை வசதி, ஏசி) பயணிக்க முடியாது.

அவர்கள் பொதுப் பெட்டியிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், IRCTC இணையதளம் அல்லது செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், ஓடிபி மூலம் தங்களது செல்போன் எண்ணை உறுதி செய்த பின்னரே முன்பதிவு செய்ய இயலும். இதே விதி ஏஜெண்ட்கள் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் பொருந்தும்.

தத்கல் டிக்கெட்டுகள் முன்பதிவுக்கு ஆதார் உறுதிப்படுத்தல் கட்டாயமாகும். உறுதி செய்யப்பட்ட தத்கல் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் திரும்ப வழங்கப்படாது.

அதேசமயம், முன்பதிவு ஆரம்பத்தின் முதல் 30 நிமிடங்கள் ஏஜெண்ட்களுக்கு அனுமதி வழங்கப்படாமல், நேரடி பயணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

முன்பதிவுக்கான காலம் 120 நாள்களிலிருந்து 90 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்பதிவு டிக்கெட் ரத்து செய்தால் பணம் 5-7 நாட்களில் கிடைப்பதற்குப் பதிலாக 48 மணி நேரத்திற்குள் திருப்பி வழங்கப்படும்.

இதற்காக பயணிகள் தங்களது வங்கி விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல், முன்பதிவு, சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் தத்கல் டிக்கெட் கட்டணங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் விலை மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train Ticket Reservation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->