தீபாவளி பண்டிகை : ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகை : ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் .!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு ரெயில்கள் மற்றும் பேருந்துகளில் செல்வார்கள்.

அதிலும் நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரெயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே பயணசீட்டு முன்பதிவு செய்துவிடுவார்கள். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ரெயில்களில் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந் தேதி வருவதால், இதற்கு முன்னதாக நவம்பர் 9-ந் தேதியே சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். ஆகவே பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே பயணசீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 

அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் (ஜூலை) 12-ந் தேதியில் இருந்து ரெயில்களில் பயணசீட்டு முன்பதிவு தொடங்குகிறது. இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில் பயணிகளின் வசதிக்காக வருகிற 12-ந் தேதி முதல் பயணசீட்டு முன்பதிவு தொடங்குகிறது. 

அதன்படி ஜூலை 12-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந் தேதியும், 13-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ந் தேதியும், 14-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ந் தேதியும், 15-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ந் தேதியும், 16-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ந் தேதியும், 17-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ந் தேதியும், 18-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ந் தேதியும் பயணம் செய்ய முடியும். 

வட இந்திய ரெயில்களுக்கான முன்பதிவு தேதியில் சில நாட்கள் மாறுதல் இருக்கலாம். இந்த முன்பதிவு 12 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். ஆகவே, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே பயணசீட்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train ticket booking start from july 12th for diwali festival


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->