ரயில் பயணிகளே உஷார்! ஏலகிரி எக்ஸ்பிரஸ் சேவையில் திடீர் மாற்றம்...! - புதிய கால அட்டவணை
Train passengers beware Sudden change Yelagiri Express service New timetable
பயணிகளின் சுகாதாரமும் பாதுகாப்பும் மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, சென்னை சென்டிரல்-ஜோலார்பேட்டை இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16089) மற்றும் நாளை ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் அதே சேவையின் திரும்பும் ரெயில் (வண்டி எண் 16090) ஆகியவை, புதிய தலைமுறை எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தின் மூலம் பயணிகளுக்கு மேலும் வசதியான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவம் கிடைக்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Train passengers beware Sudden change Yelagiri Express service New timetable