ரெயில் தாமதம் அலர்ட்! இந்த தேதிகளில் பயணிக்கும் முன் கண்டிப்பாக படிக்கவும்! - தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Train Delay Alert Must Read Before Traveling These Dates Important Announcement Issued by Southern Railway
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவித்ததாவது,"சென்னை கோட்டப்பகுதியில் நடைபெற உள்ள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் கவனத்திற்கு! ரெயில் நேரங்களில் சிறிய மாற்றங்கள்.சென்னை சென்ட்ரலில் இருந்து 26ஆம் தேதி இரவு 10.50 மணிக்கு புறப்படும் பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் (12657), இப்போது 27ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு (மொத்தம் 2 மணி 40 நிமிடம் தாமதம்) புறப்படும்.

அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து 26ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649), 27ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு (மொத்தம் 2 மணி 40 நிமிடம் தாமதம்) புறப்படும்.எழும்பூரிலிருந்து 26, 27, 29 நவம்பர் மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் (12635), வழக்கத்தை விட 20 நிமிடம் தாமதமாக மதுரையை சென்றடையும்.போத்தனூரிலிருந்து 21ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06124), சென்ட்ரல் நிலையத்தை 15 நிமிடம் தாமதமாக வந்தடையும்.அதே ரெயில் 28ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் போது, சென்ட்ரலை 5 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து 17ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06151), கன்னியாகுமரியை 25 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
19 மற்றும் 21ஆம் தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் குண்டக்கல் சிறப்பு ரெயில் (06091), வழக்கத்தை விட 15 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
21ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிவமொக்கா வாராந்திர எக்ஸ்பிரஸ் (12691), 20 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
24ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்படும் மங்களூரு எக்ஸ்பிரஸ் (12601), வழக்கத்தை விட 15 நிமிடம் தாமதமாக இலக்கை அடையும்.
தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளதாவது, பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றவுடன் வழக்கமான சேவை மீண்டும் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
English Summary
Train Delay Alert Must Read Before Traveling These Dates Important Announcement Issued by Southern Railway