சென்னையில் சோகம்!...பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளத்தில் தவறி விழுந்த பந்தினை எடுக்க முயன்ற போது, சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தேரடி பகுதியில் லிப்ட் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அதில் தண்ணீர் தேங்கியது. இதற்கு அருகே அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொடிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பள்ளத்தில் பந்து தவறி விழுந்த நிலையில், அதனை எடுப்பதற்காக சிறுமி ஒருவர் முயன்றுள்ளார். அப்போது, பள்ளத்தில் தவறி விழுந்த வனமாலி என்ற 8 வயது சிறுமி நீரில் மூழ்கினார்.

இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், படுகாயத்துடன் அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருவல்லிக்கேணி தேரடி தெருவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் அமைப்பதற்காக  பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy in chennai a girl fell into a ditch and drowned


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->