கடலில் தொடரும் சோகம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள்...! - மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 9 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,"ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மத்தியாஸ் (22), மோபிஸ் (21), அபிஸ்டன் (27), ஆண்டனி புரூட்ஸ் (42), எபிஸ்டன் (29), ஸ்டீவன்சன் (22), ஜான் ஜேசன் (24), ஆண்டனி பிரதீப் (26), சுபார்தன் (24) ஆகிய 9 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்துள்ளனர்.

அவர்களுடன் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச கடல் எல்லையை காரணம் காட்டி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த தொடர் கைது நடவடிக்கைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 ராமேஸ்வரம் மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகையும் உடனடியாக மீட்க வேண்டும்.

இதற்காக தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழக மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

மீனவர் பிரச்சினையை வெறும் அறிக்கைகள் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுடன் கடந்து செல்லாமல், தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy continues at sea 9 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy Manickam Thakur warns central government


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->