#கள்ளக்குறிச்சி: பேருந்து பயணத்தில் உறங்கி கொண்டிருந்த பயணி... எழுப்பிவிடச் சென்ற நடத்துனருக்கு அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் பயணிக்கும் போது உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரான சுப்பிரமணி என்பவர் விழுப்புரத்திலிருந்து சேலம் சென்ற பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்ற போது ஒருவர் அதிகமாக இருப்பதை அறிந்த நடத்துனர் அவரை எழுப்பி விவரம் கேட்க முயன்றிருக்கிறார்.

அப்போது அந்த நபர் கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  நடத்துனர் அருகிலிருந்த சின்னசேலம் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்துனர் மற்றும் சக பயணிகளிடம் விசாரணை நடத்திய காவல்துறை மறைந்த ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. ஓய்வு பெற்ற ஆசிரியர் பேருந்து பயணத்தின் போது உயிரிழந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy befell a retired teacher during a bus journey


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->