தமிழகத்தில் சுற்றுப்பயணம்: தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!
Tourism in Tamil Nadu Prime Minister Modi inaugurates Thoothukudi Airport
தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி 28-ந் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் வருகிற 27-ந் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, ஆடித் திருவாதிரை விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது கண்காட்சி நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்த என கவல்கள் வெளியாகி உள்ளது.
.
கேரளாவில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் 27-ந் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவான, ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

மேலும், இந்த விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும், பல்வேறு தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுநாள் (28-ந் தேதி) தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
Tourism in Tamil Nadu Prime Minister Modi inaugurates Thoothukudi Airport