மழை வெள்ளம்.. நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Tomorrow Holiday for sirkazhi thaluk due to rain floods
தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலை கன மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த தொடர் கனமழை காரணமாக ஒருசில பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கனமழை, வெள்ளம் காரணமாக நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Tomorrow Holiday for sirkazhi thaluk due to rain floods