கோடை வெயிலால் தமிழகத்தில் தக்காளி மகசூல் குறைவு.! - Seithipunal
Seithipunal


கோடை வெயிலால் தமிழகத்தில் தக்காளி மகசூல் குறைவு.!

தமிழகத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோடை மழை தொடர்ந்து பெய்ததால் தக்காளியின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்குவதால் தக்காளி மகசூல் குறைந்துள்ளது. அதனால் வெளிமாநிலத்திலிருந்து தக்காளி வரத்து அதிகரித்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விலை உயர்வு குறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் சின்னமாயன் தெரிவித்ததாவது, ‘‘தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தக்காளி மகசூல் 75 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் தற்போது ஆந்திரா, கர்நாடகா தக்காளிதான் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. ஆனால், அந்த மாநிலங்களிலும் மழை அதிகமாக பெய்வதால் அவர்களுக்கே தக்காளி பற்றாக்குறை ஏற்படத் தொடங்கி உள்ளது. 

அதனால், 15 கிலோ பொடி தக்காளி ரூ.250, 15 கிலோ முதல் தர தக்காளி ரூ.450 வரை விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் இந்த தக்காளிகள் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomato yield in tamilnadu for summer heat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->