#BREAKING || தமிழகம் முழுவதும்.. 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.!! வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நிலவும் விலைவாசி உயர்வு தொடர்பாக நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நியாய விலை கடைகள் மற்றும் அமுதம் அங்காடி மூலமாக குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யவும் அறிவுறுத்தியதோடு முதற்கட்டமாக தமிழக முழுவதும் 300 நியாய விலைக் கடைகளை தேர்ந்தெடுத்து தக்காளி விற்பனையை தொடங்குமாறு அறிவுறுத்தி இருந்தார். முதலமைச்சரின் உத்தரவின் படி  தமிழகம் முழுவதும் நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் நலன் கருதி நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும், ஏற்கனவே சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக நாளை முதல் 300 ரேஷன் கடைகளில் ஒருவருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomato sales in 300 ration shops from tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->