இன்று முதல்.. தமிழகத்தில் விலை குறையும் பொருட்கள்.! பொதுமக்கள் நிம்மதி.! - Seithipunal
Seithipunal


நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயம் பெரிய அளவில் பாதித்துள்ளது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக தக்காளியின் விலை ₹.100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரிசி, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக சந்தைகளுக்கு இவற்றின் வரத்து போதுமானதாக இல்லை. எனவே இந்தப் பொருட்களின் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. 

இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அவதியை ஏற்படுத்தியுள்ளது. தக்காளியின் விலை பல இடங்களில் கிலோ 150 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று முதல் சென்னையில் அமுதம் அங்காடிகளில் துவரம் பருப்பு அரை கிலோ ₹.75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு அரை கிலோ ₹. 60 ரூபாய்க்கும், தக்காளி கிலோ ₹.60 க்கும் விற்கப்பட உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomato and dhal price reduction in ration shop Of Tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->