ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.! - Seithipunal
Seithipunal


ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆரம்பமானது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்த இந்தத் தேர்வை 4,33,000 மாணவிகளும், 4 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும், 23 ஆயிரத்து 747 தனித்தேர்வுகளும் எழுதினர். 

மொத்தம் 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்த முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் அறியலாம் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளைய தினமே பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tomarrow plus two public exam result release


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->