பழனி முருகன் கோவில்: இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்..!
Today Rope car service stop at Palani Murugan temple
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ரோப் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் "பழனி முருகன் கோவில்" முன்றாவது படை வீடு ஆகும். இது பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும்.
இதில் மலை உச்சியில் வீற்றிருக்கும் பழனியாண்டவரை பக்தர்கள் தரிசிப்பதற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று வர ரோப் கார், மின்இழுவை ரயில் சேவைகளும் உள்ளன. இதில் ரோப் காரில் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதிசெய்யும் வகையில், கோயில் நிர்வாகம் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.
அதன்படி, இன்று பழனி ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் படி பாதை வழியாக அல்லது மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Today Rope car service stop at Palani Murugan temple