தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பனிமய மாதா திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 5ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கன மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. இந்த நிலையில் இந்த வருட திருவிழா கடந்த மாதம் ஜுலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவின் கடைசி நாளான 10ஆம் நாள் வெகு விமர்சையாக இருக்கும். அதனை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 5ஆம் தேதி) 10ஆம் நாள் திருவிழா தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இனஞ (ஆகஸ்ட் 5ம் தேதி) உள்ளூர் விடுமுறை என்பதால், இரண்டாவது சனிக்கிழமையான ஆகஸ்ட் 13ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today local holiday for tuticorin district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->