லியோ படக்குழுவினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு - இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர ராஜாமுருகன். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பொதுநல மனு ஒன்றைத்  தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த லியோ என்ற திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

இந்த படத்தில், வன்முறை, சட்ட விரோத செயல்கள், கார், இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, போலீசாரின் உதவி இருந்தால் போதும் அனைத்து குற்றங்களையும் செய்ய முடியும் என்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை இடம் பெறச்செய்த காரணத்துக்காக லியோ படக்குழுவினர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் உள்ளிட்டோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு குறித்த விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today investigation of leo movie case in madurai high court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->