புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!!
today hearing bussy anand bail case in supreme court
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் மாநகர போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டத்தில், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை போலீசார் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
English Summary
today hearing bussy anand bail case in supreme court