செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் 2000 கன அடியாக உயர்வு.!! - Seithipunal
Seithipunal


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, டி நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்ஆர்சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக, இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 2200 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today chembarambakkam lake water open


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->