மழை பாதிப்பு! முக்கிய தேர்வு ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal



பட்டதாரி ஆசிரியர்/ வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு மழை பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03 / 2023 மற்றும் 03A / 2023ன் படி 07.01.2024 அன்று பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் (BT / BRTE) தேர்வு நடைபெறவிருந்தது.

இந்நிலையில், இந்த தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 

அதன்படி, மேற்கண்ட தேர்வானது வருகின்ற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்கண்ட தேர்விற்க்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம்" என விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt TRB Exam Postponed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->