இன்று இரவு பேருந்து ஓடுமா? பேச்சுவார்த்தை என்ன ஆச்சு? முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது. இதற்கு காரணம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அரசுப் போக்குவரத்துக் கழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் மறுநாளான ஜனவரி 10 ஆம் தேதி தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் நல தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உள்ளிட்டவை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வர உள்ளதால் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt tnstc talk postponed on feb7


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->