தமிழ்நாடு முழுவதும்"PM SHRI" பள்ளிகள்.. மத்திய- மாநில அரசுகள் இடையே ஒப்பந்தம்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு செயல்படுத்தி வரும் "PM SHRI" திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது. PM SHRI NEP-2020 முன்மாதிரி பள்ளிகள் மூலம் பல பயனுள்ள முயற்சிகளை செயல்படுத்தி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 

இதுகுறித்து இது குறித்து தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா மத்திய பள்ளி துறை அமைச்சகத்துக்கு நேற்று எழுதி உள்ள கடிதத்தில் "23.02.2024 தேதியிட்ட உங்கள் கடிதத்தைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில், PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த கல்வியாண்டு 2024-2025 தொடங்குவதற்கு முன் மாநிலத்தால் கையெழுத்திடப்படும். நடப்பு 2023-24ஆம் நிதியாண்டிற்கான 3வது மற்றும் 4வது தவணையை தயவு செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது"என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024-2025 கல்வியாண்டு தொடங்கும் முன் மாநிலத்தால் கையெழுத்திடப்படும். தமிழக அரசுக்கும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கும் இடையேயான இந்த ஒப்பந்தத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் வலுவான கட்டமைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் இத்தகைய சூழலில் தமிழக அரசின் இந்த புதிர் ஒப்பந்தம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt request to Central govt for pm Shri schools


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->