குட் நியூஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.!! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படையை 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சரும் மு.க ஸ்டாலின் கனிவுடன் பரிசளித்து 01.07. 2023 முதல் ஒன்றிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போது எல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசு அதை பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அவ்வகையில் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு ஒன்று ஒன்று 2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு பணியாளர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்து 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுவிள்ளார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வால சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 2587. 91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலன் கருதி இந்த கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt increased dearness allowance to 50 persentage


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->