தமிழகத்தில் 1444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு - தமிழக அரசு!
TNGovt Announce 09022023
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதன்மைச் செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சில புள்ளி விவரங்களை அதுல் ஆனந்த் தெரிவித்தார். அதன்படி,
* தமிழக அரசின் தொழிலாளர் துறையின் சீரிய முயற்சியால், கடந்த 2017 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் வரை 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு விடுதலை சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
* மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு ரூ.3,03,73,000 நிவாரணமாக வழங்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மறுவாழ்வு நிவாரணத் தொகை :
* 2021-ன்படி கொத்தடிமைத் தொழிலாளர் முறை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆண் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம்,
* சிறப்பு பிரிவு பயனாளிகள் அதாவது பிச்சை எடுக்கும் தொழிலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள், கட்டாய குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ரூ.2 லட்சம்,
* திருநங்கைகள், ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வன் கொடுமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 3 லட்சம் யாக
உடனடி மறு வாழ்வு நிவாரண தொகை :
* தொழிலாளர்களுக்கு உடனடி மறு வாழ்வு நிவாரண தொகையாக ரூ.30,000/- மற்றும் குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வீட்டுமனை, பட்டா, வேலைவாய்ப்பு கல்வி, தொழிற்திறன் பயிற்சி, சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.