பரந்தூர் விமான நிலையம் :: போராட்டத்தை கைவிட்ட 13 கிராம மக்கள்..!! விமான நிலையம் தொடர்பாக நாளை அமைச்சர்கள் ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 146 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் தமிழக அரசு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்த புள்ளி வெளியிட்டது. இந்த விவகாரம் 13 கிராம மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிராக 13 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ஏகனாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடை பயண போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேற்று போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் 13 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேரணி செல்வதை உறுதிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று காலை ஏகனாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணியாக நடைபயணம் மேற்கொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் உண்டானது.

போலீசாரை கண்டித்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சரவண கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி, தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நாளை தமிழக அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து நடை பயணத்தை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்ப வாய்ப்பு என தெரியவந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளனர். பரந்தூர் பசுமை விமான நிலையம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Ministers will discuss about Parandur airport tomorrow


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->