தமிழக அரசின் 1000 ரூபாய் பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் எப்போது? எப்படி? கிடைக்கும்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவி உள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 4,52,168பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,494 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 

இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில், 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நிவாரணம் குடும்ப தட்டை தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மொத்தமாக ரூ.3250 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாத ரேசன் பொருளை ஏப்ரல் மாதம் வாங்க அனுமதியும், நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு நிதிஉதவி வழங்கப்படும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்படும் என்றும், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனருக்கு 17 கிலோ அரிசி, எண்ணெய் மற்றும் பருப்பு வழங்கப்படவுள்ளது. நியாய விலைக்கடையில் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக டோக்கன் முறையில் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி இதுகுறித்து கூறுகையில், கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள முடக்கம் பொதுமக்கள் தனித்தனியாக இடைவெளிவிட்டு இன்று பணம் மற்றும் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

நாளொன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் பொருளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதம் பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்காமல் இருந்தால் தற்போது வாங்கிக்கொள்ளலாம். அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் நியாய  விலை பொருட்கள் பெற விருப்பமில்லாதவர்கள் TNPDS இணையத்தளத்தில் "வாங்க விருப்பம் இல்லை" என பதிவு செய்யலாம் எனக் கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt rs 1000 ration card


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal