பொதுத்தேர்வு எதிரொலி - அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

* தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட வினாத்தாள், விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அமைக்க வேண்டும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

* பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது.

* செல்போன்களை அணைத்து, தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

* பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt restriction announce for public exam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->