"அக்டோபர் 31-க்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்!": அரசு ஊழியர்களுக்குத் தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வருகிற அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறினால் பதவி உயர்வு மறுக்கப்படுவதோடு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சொத்து விவரங்கள் தாக்கல் கட்டாயம்: தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள், சேமிப்புகள், கடன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 'ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு' (IFHRMS) இணையதளத்தில் அக்டோபர் 31-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பினாமி/உறவினர் சொத்துகள் வெளிப்படைத்தன்மை: வேறு நபர்களின் பெயரில் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியிருந்தாலும், அவற்றைக் குறிப்பிட்டு, அந்நபருக்கும் அரசு ஊழியருக்கும் உள்ள உறமுறையையும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

பதவி உயர்வுக்கு நிபந்தனை: உரிய காலக்கெடுவுக்குள் சொத்து மதிப்புகளைத் தாக்கல் செய்யும் அரசு ஊழியர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான (Promotion List) பட்டியலில் இடம்பெறும்.

விதியை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை: குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அது அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளை (Government Servants' Conduct Rules) மீறிய செயலாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Govt Orders All State Employees to Declare Movable and Immovable Assets by Oct 31 on IFHRMS Portal


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->