விபத்தில் பலியாகும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்வு!
TN Govt Order
தமிழகத்தில் பணியிடங்களில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் ரூ.8 லட்சம் நிவாரணமாக வழங்க அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிவாரணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் இழந்த ஆதாரத்தை ஓரளவாவது ஈடு செய்யும் வகையில் இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அரசின் கவனம் வைக்கப்படும் என்றும், நிவாரணத் தொகை உயர்வு அதன் ஒரு பகுதி மட்டுமே என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.