இனியாவது இதை செய்யுங்கள்.! தமிழக மக்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளவை,

குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, 556 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் 4.23 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். நாளொன்றுக்கு, தினமும் 214 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கும் வகையில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு சராசரியை விட 69 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. ஜனவரி முதல் மே வரை 108 மில்லிமீட்டருக்கு பதில் 34 மில்லிமீட்டர் சதவீதம் மழை பெய்துள்ளது.

ஆகையால், தமிழக மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt ask drinking water


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->