அவசரகால தேவை கருதி முக்கிய முடிவெடுத்த முதல்வர்! மின்னல் வேகத்தில் முடக்கி விடப்பட்டுள்ள அதிகாரிகள்! மூன்று நாட்களில்..... ! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அடுத்தகட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இன்று அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், துறை இயக்குனர்கள், சுகாதார துறை அதிகாரிகள் என பலரும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தற்போது உள்ள சூழலை சமாளிக்க தமிழகத்தில் புதிதாக 530 மருத்துவர்கள் 1000 செவிலியர்கள் 1508 ஆய்வக நுட்புனர்களை உடனடியாக தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இவர்கள் அனைவரும் மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கான பணி ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று நாட்களுக்குள் பணிகளில் சேர வேண்டும் என உத்தரவிட்டு தமிழக அரசு தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn cm announce job appointment of doctors nurse lab tech


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->