தமிழக முதல்வருக்கு திடீர் மருத்துவ பரிசோதனை.. நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அந்த தொற்று பாதிப்பில் இருந்து அவர் விடுபட்ட நிலையில், தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். 

அதன்பின்னர், வீடு திரும்பினார். இதுகுறித்து, ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு முதுகு வலிக்காக இந்த பரிசோதனை நடைபெற்றது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN chief minister medical test for back pain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->